Ashoka the 2nd

கொரோனா லீவ்..

கொரோனா லீவ்..

தன் முயற்சியில் சற்றும் தளராத விக்கிரமாதித்தன் எனும் முத்துசாமி மரத்தில் ஏறி அதில் தொங்கிய உடலைக் கீழே வீழ்த்தினார். பின்னர் கீழேயிறங்கி உடலைத் தூக்கிக் கொண்டு மயானத்தை நோக்கிச் செல்லுகையில், அதனுள் இருந்த வேதாளம் (அசோக்) கண் விழித்துக்கொள்ள…

இம்முறை முந்திக்கொண்ட விக்கிரமாதித்தன் வேதாளத்திடம் கேள்வி கேட்டார் “உலக நாடுகளை கொரானா தாக்கி எல்லோருக்கும் இரண்டு மாதம் லீவு கொடுத்துள்ளது. இப்படி லீவு கிடைக்கும் என்று முன்பே தெரிந்திருந்தால் தமிழ்நாடு எப்படி இருந்திருக்கும். அதைப் பற்றி சொல்?” என்று கேட்க
வேதாளம் தலையை சொரிந்து கொண்டு “மன்னா இது ஒரு dry subject. என்னத்த சொல்ல”

“யோசி. தொங்கிட்டு தூங்கிட்டே தானே இருக்க”
வேதாளம் பறந்து சென்று மரத்தில் தொங்கியடி பேசத் தொடங்கியது.

“கேள் மன்னா! மது பிரியர்கள் இரண்டு மாதத்திற்கு தேவையான சரக்குகளை வாங்கி வீட்டில் ஸ்டாக் வைத்துக்கொண்டு “சரக்கு வச்சிருக்கேன் எறக்கி வச்சிருக்கேன்” என பாடித் திரிவர்.

மாட்டிக்கொண்டு முழிக்கும் பத்தாவது, 12வது மாணவர்கள் “அந்த மிச்சம் இருக்கிற பரிட்சையை சீக்கிரம் வைங்க” என்று கேட்டு எழுதி விட்டு நிம்மதியாக இருப்பார்கள். பரிட்சை எழுதாமல் பாஸான ஆடாம ஜெயிச்சோமடா புள்ளிங்கோ நாலு மாதம் முன்னாடியே படிப்பதை நிறுத்தியிருப்பார்கள்.

சலூன் பிரச்சனைக்காக ஆண்கள் அனைவரும் கோவிந்தா கோவிந்தா என மொட்டை போட்டுக்கொண்டு தமிழ் தேசம் மொட்டையர்களின் தேசமாக மாறியிருக்கும். மொட்டை மூளைக்கு நல்லது என்று ஒரு கும்பலும், அரசு மக்களுக்கு மொட்டை போட்டு விட்டது என்று எதிர்க்கட்சிகளும் பிரசாரிப்பர்.

பெண்கள் எலுமிச்சை சாத பவுடர், புளிசாத பவுடர், உப்புமா பவுடர், கேசரி பவுடர் என வாங்கி குவித்திருப்பர். சில பெண்கள் இரண்டு மாதம் டைவர்ஸ் வாங்கி கொண்டு ஓடிப்போயிருப்பர்.

புது மருமகன்கள் அனைவரும் மாமியார் வீட்டுக்கு சென்று தங்கிக் கொண்டு குந்தித் தின்று குன்றை கரைத்து வயிற்றை தள்ளிக்கொண்டு அலைவர்.

ஐடி நிறுவனங்கள் தாலி போன்று ஒரு வஸ்துவை கண்டுபிடித்து எம்பிளாய்ஸ் கழுத்தில் கட்டி “எப்ப சாப்பிடுறான், எப்ப வேலை செய்றான்” என்று கண்காணிப்பர்.

அரசு வழக்கம் போல டாஸ்மாக் உண்டு இல்லை. ஆன்லைன் கிளாஸ் உண்டு இல்லை னு வெள்ளாடிட்டு இருக்கும்.

கொரோனா நுழையாமல் அமெரிக்காவை சுற்றிப் டிரம்ப் சுவர் எழுப்பி இருப்பார்.

சீன ஊடகங்கள் வழக்கம் போல கொரோனா பத்தி பேசுன டாக்டரை காணோம். லேபை காணோம்னு தேடிட்டு இருக்கும்.

“சரி இந்த பதிவுக்கு எப்படி பின்னூட்டங்கள் வரும். அதையும் சொல்” என்று விக்கிரமாதித்தன் கேட்க வேதாளம் தயங்கியது.

“பரவாயில்லை சொல் நம்ம புள்ளிங்கோ தான். கோவிக்க மாட்டார்கள்”.

“போன பதிவிற்கு பின்னூட்டங்கள் இட்டவர்களின் அதே வரிசையில்”

P Muthu Swamy அருமை

Srikanth Jayaraman அசோக் அண்ணே பக்கத்துல தொங்குற பெண் வேதாளம் யாரு ?

Selvaprakash Nattudurai வேதாளத்தை
வென்ற
விக்கிரமாதித்தனே
விந்தையை விதைத்த
வித்தகனே
வெளுத்துட்டீங்க….

Suja Sujatha பிரமாதம் ப்பா

Neela Alangudy இதேபோன்று நண்பர் கந்தசாமி பத்தாவது படிக்கும் நண்பர்களுக்காக வேதாள வித்துவான் என்ற புத்தகம் எழுதி கருத்துக்களை தொங்க விட்டிருக்கிறார். ரொம்ப நேரம் தலைகீழா தொங்காதீங்க. மூளை சரியாயிடும். அப்படியும் ஆகலைன்னா நாளைக்கு நான் ஒரு போட்டோ போடுறேன்.

Thiruppathi Vasagan அட்டகாசம் நண்பரே. பிரமாதமாக வந்திருக்கிறது. 😁😁😁💐💐💐💐💯💯💯💯💯

Shanthirajasheker Shanthi Life is like that. Men have to hang in front of wives

Lasyaa சூப்பர் பாஸ்.

அம்மைநாதன் சித அண்ணா கலக்கல்..

Anuradha Prasanna எப்போதும் மரத்துல ஏறி இந்த அசோக வேதாளத்தை வெட்றதுக்கு மரத்தையே வெட்டித் தள்ளியிருந்தா வேதாளத்தை வாக்கிங்கிலயே கூட்டிட்டு போயிருக்கலாம்.

TK Vidhya Kannan இப்படி லீவு கிடைக்குமென முன்பே தெரிந்திருந்தால் கொஞ்சம் தயாராக இருந்திருக்க முடியும். சரி எந்த இடத்துல தொங்கிட்டு இதையெல்லாம் யோசிச்சீங்க..

Joseph Alex நம்மளும் தொங்குறோம்.. படிச்சிட்டு.

Padma Sundaram ஆபீஷ்ல உப்புமா பவுடரெல்லாமா கிடைக்குது ? ஆபீஸ் எங்கேயிருக்கு..

Kalai Kalaiselvi சூப்பர் சகோ. எங்கியோ போயி தொலஞ்சி போயிட்டீங்க.

Anandhi Jeeva தபூ சங்கரை கொன்னுட்டு வேதாளமாயிட்டீங்களா. இந்தா வர்றேன்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *