Ashoka the 2nd

சலோ பாய்…

சென்னையிலிருந்து போபாலுக்கு நடந்து செல்வதை நினைக்கும்போதே சுரேந்தருக்கு மலைப்பாயிருந்தது. டென்ட்டினுள் மனைவி ரேஷ்மி படுத்துக் கிடக்க, ஐந்து வயது மகனும், மூன்று வயது மகளும் விளையாடிக் கொண்டிருந்தனர். கட்டுமானப் பணிகள் செய்ய இவர்களுடன் வந்திருந்த மேலும் ஐந்து  வடஇந்திய குடும்பங்கள் சென்னையில் தங்கியிருந்தனர். ஒரு கட்டிடம் கட்டி முடித்ததும் மற்றொரு கட்டிடத்திற்கு சூப்பர்வைசர் அழைத்துப் போவார். அங்கு டென்ட் அமைத்துக் கொள்வார்கள். போபாலை விட அதிக வேலை வாய்ப்பும், கூலியும் கிடைத்ததால் கடந்த நான்கு ஆண்டுகளாக சென்னையில் […]

Read More

கூண்டுக்கிளி

சிகாகோ ஏர்போர்ட் நுழைவு வாயிலில் வந்து நின்ற காரிலிருந்து பரத் இறங்கினான். பயணிகளை உதிர்த்துச் செல்ல இரண்டு நிமிடமே அனுமதிக்கப்பட்டிருக்க, டிக்கியை திறந்து வேகமாக டிராலி பேக்கை எடுத்தான். பின் சீட்டு கண்ணாடியருகே குனிகையில், டிரைவர் சீட்டில் அமர்ந்திருந்த மனைவி வர்ஷா கண்ணாடியைக் கீழிறக்கினாள். சீட் பெல்ட்டுடன் அமர்ந்திருந்த ஆறு வயது மகனின் தலையைக் கலைத்து, இரண்டு வயது மகளின் கன்னத்தைக் கிள்ளி, ‘பீ குட்” என்றான். பொம்மைகள் போல இருவரும் தலையசைத்தனர்.“பை” என்று மனைவியை நோக்கி […]

Read More

மெடூசா

வருடம் 2080 அல்லது 2081க இருக்க வேண்டும்.  என்னவாயிருந்தால் என்ன. நாளை காலை விஞ்ஞானி ரான் உயிரோடிருக்கமாட்டார்.  விஞ்ஞானியா இல்ல அறிவியலாரா? எது சரியான தமிழ் பதம்?  யாருக்கென்ன.  ரானுக்கு இன்றே கடைசி தினம்.  2052ல் தொடங்கி பூமியில் நிலவிய அதீத வெப்பத்தால், பனி மலைகள் உருகின. கடல் மட்டம் உயர்ந்து, சுனாமி போன்ற இயற்கை பேரழிவுகளால் உலகின் பெரும்பாலான நாடுகள் மூழ்கிய பின் எஞ்சியிருந்தவர்கள் தீவு போன்ற இந்த நிலப்பரப்பில் தங்கத்தொடங்கி பல வருடங்கள் ஆகி […]

Read More

சொற்கல்

“எந்த …………. என்ன பத்தி இப்படி உங்கிட்ட தப்பா சொன்னா? இதே வேல ……….. போச்சி ……….., ……….” என்று கெளதம் எழுத இயலாத கெட்ட வார்த்தைகளால் திட்டி பல்லை கடிக்க, சோபனாவின் கை மெலிதாக நடுங்கியது. ஓசைகள் உருகி சிற்றோடையாய் ஓடுவதைப்போல் மேகன் ட்ரைனர் “ஐ வில் பைட் பார் மீ…. ஊகூ” என பாடிக் கொண்டிருந்தாள்.  அவர்கள் அமர்ந்திருந்த ஸ்டார் பக்ஸில் ஒளியும் இருளும் ஒட்டிப் பிறந்த இரட்டை குழந்தைகளாய் கொஞ்சிக் கொண்டிருந்தன.  பழைய […]

Read More
Crash course to crash in love…

Crash course to crash in love…

கடவுளின் டைரிக் குறிப்பு… காதலில் விழுவது எப்படி… Crash course to crash in love… சொந்தக்காரர்கள் பிள்ளைகளை காலேஜில் சேர்க்க கூட்டம் கூட்டமாய் வீட்டுக்கு படையெடுக்கும் இந்நேரத்தில் சம்மர் ஊட்டியைப் போல வீடு நெரிசல் படுகிறது. வடக்கில் செல்லும் அன்ரிசர்வ்ட் கம்பார்ட்மென்டாய் வீடு முழுதும் இரவில் படுத்து உருளுகிறோம். சிலருக்கு RAC. சேரில் உட்கார்ந்தபடி… நேற்றிரவு தெற்கில் தலை வைத்து தூங்கியெழுந்ததும் காதலை பற்றி எழுத தோன்றியது. இளைஞர்களுக்கு மேய்ப்பனாக அவர்களை கரைசேர்க்கும் கடமை எனக்கு இருப்பதாய் பட்டது. நீ என்ன 1000 காதல் செய்த அபூர்வ சிகாமணியா […]

Read More
Eventless  Day

Eventless  Day

In this fast-food world, history also repeated within a week. Again Chennai was mourning for former PM Vajpayee and the roads were less crowded. Once bitten twice shy. So today morning itself, I checked my phone for any holiday.There were two messages from friends. First one stated…”See State Govt has given full day leave whereas […]

Read More

அனாதை தெய்வங்கள்

“போலாம்மா” என்றபடி வேகமாக வாசலுக்கு ஓடினான் வினய். டிஷர்ட்டில் நுழைந்தபடி “வெளிய போவாதடா”  என்று கத்தினான் சித்தார்த். “அவ வெயிட் பண்ணிட்டிருப்பா” “ஓலா புக் பண்ணிருக்கன். கார் வந்துரும். இரு” “அவளைப் பார்க்க பத்து மணிக்கு வர்றேன்னு சொன்னோம். இங்கயே பத்து ஆவப்போவது” என்றாள் மகள் கீர்த்தி. “பாவம். காலைல இருந்து காத்துட்டு இருப்பா” என்று ஒத்து ஊதினான் வினய். “பாத்ரூமுக்குள்ள போனா ஒரு மணி நேரம் என்ன பண்ணுவீங்களோ தெரியல. உங்களாலத்தான் லேட்டு” என்றாள் சித்தார்த்தின் […]

Read More

ததாஸ்து

ஆரியபவனா, ஆயுதபவனா என்று நினைக்குமளவு அந்த ஓட்டலின் வரவேற்பறையில் வேல், கம்பு, அரிவாளுடன் ஆறடி அய்யனார் சிலை காவலுக்கு நின்றது. உள்ளே நுழைந்ததும் வலப்புறத்தில் கேஷியர் டேபிளில் குபேரன் சிலை மல்லிகை பூ மாலையுடன் படியளக்க குங்குமம், சந்தனம், கற்கண்டு கிண்ணங்களுடன் பில் குத்தும் கம்பி உடல் நிரம்பியிருந்தது. ஓனரின் நெற்றியிலிருந்த விபூதியளவிற்கு சித்தனாதனே பூசியிருக்க மாட்டார். அருகில் கூல்ட்ரிங்க் பாட்டில்களுடன்  பிரிட்ஜ் உடல் வியர்த்திருக்க, பில் போடும் கண்ணாடிக் கேபினில் பேப்பர் சுருள் சுழன்றது. எதிர்புறத்தில் […]

Read More

அது

சென்னையின் ரோபோடிக்ஸ் லேபரட்டரியில் ‘பிளிப்’பென்று ஒரு நேனோ செகண்ட் இடைவெளியில் கரண்ட் கட்டாகி மீண்டும் வர  “அது” விழித்துக் கொண்டது.  புதிதாக பிறந்த குழந்தை போல மலங்க மலங்க விழித்தது. எதிரே சைபர்,  ஒன்று என வார்த்தைகள் ஓடிக் கொண்டிருக்க,  எண் கூட்டி படிக்க ஆரம்பித்தது. லேபரட்டரியின் கம்ப்யூட்டர் எதிரே அமர்ந்திருந்த மான்டி “செல்வா,  கரண்ட் போயிட்டு போயிட்டு வருது பார்” என்று உள்ளிருந்தவனிடம் கத்த “தோ போன் பண்ணிட்டேன். பேட்டரிக்காரங்க வராங்களாம்” என்றான் உதவி. கம்பியூட்டரின் […]

Read More

அன்பெனும் அருமருந்து

சென்னை ஸ்டான்லி மருத்துவமனையின் மருத்துவர்கள் அறையில் உடலில் அணிந்திருந்த பாதுகாப்பு ஆடைகளை களைந்து விட்டு சானிடைசர் போட்டு கைகளை கழுவிக் கொண்டு முகத்தை அலம்ப கண்ணாடியில் பார்த்தபோது தான் மாஸ்க் இன்னும் கழட்டப்படாமல் இருந்ததை பார்த்தாள் ஆர்த்தி. மெதுவாக  மாஸ்க்கை முகத்திலிருந்து உரித்தெடுக்க,  சிவந்த முகம் கன்னிப் போயிருந்தது. மாஸ்க் மூக்கின் மேல் அழுந்திய இடம் சிவப்பு கோடிட்டிருந்தது.  முகத்தை அலம்பிவிட்டு வெளியே வந்தாள்.  நைட் ஷிப்ட் எட்டு மணிக்கே முடிந்திருந்தாலும் வெளியில்வர காலை பத்து மணி […]

Read More