Ashoka the 2nd

கொரோனா லீவ்..

கொரோனா லீவ்..

தன் முயற்சியில் சற்றும் தளராத விக்கிரமாதித்தன் எனும் முத்துசாமி மரத்தில் ஏறி அதில் தொங்கிய உடலைக் கீழே வீழ்த்தினார். பின்னர் கீழேயிறங்கி உடலைத் தூக்கிக் கொண்டு மயானத்தை நோக்கிச் செல்லுகையில், அதனுள் இருந்த வேதாளம் (அசோக்) கண் விழித்துக்கொள்ள… இம்முறை முந்திக்கொண்ட விக்கிரமாதித்தன் வேதாளத்திடம் கேள்வி கேட்டார் “உலக நாடுகளை கொரானா தாக்கி எல்லோருக்கும் இரண்டு மாதம் லீவு கொடுத்துள்ளது. இப்படி லீவு கிடைக்கும் என்று முன்பே தெரிந்திருந்தால் தமிழ்நாடு எப்படி இருந்திருக்கும். அதைப் பற்றி சொல்?” என்று கேட்கவேதாளம் தலையை சொரிந்து கொண்டு “மன்னா இது ஒரு dry subject. என்னத்த சொல்ல” “யோசி. தொங்கிட்டு தூங்கிட்டே தானே இருக்க”வேதாளம் பறந்து சென்று மரத்தில் தொங்கியடி பேசத் தொடங்கியது. “கேள் மன்னா! மது பிரியர்கள் இரண்டு மாதத்திற்கு தேவையான சரக்குகளை வாங்கி வீட்டில் ஸ்டாக் வைத்துக்கொண்டு “சரக்கு வச்சிருக்கேன் எறக்கி வச்சிருக்கேன்” என பாடித் திரிவர். மாட்டிக்கொண்டு முழிக்கும் பத்தாவது, 12வது மாணவர்கள் “அந்த மிச்சம் இருக்கிற பரிட்சையை சீக்கிரம் வைங்க” என்று கேட்டு எழுதி விட்டு நிம்மதியாக இருப்பார்கள். பரிட்சை எழுதாமல் பாஸான ஆடாம ஜெயிச்சோமடா புள்ளிங்கோ நாலு மாதம் முன்னாடியே படிப்பதை நிறுத்தியிருப்பார்கள். சலூன் பிரச்சனைக்காக ஆண்கள் அனைவரும் கோவிந்தா கோவிந்தா என மொட்டை போட்டுக்கொண்டு தமிழ் தேசம் மொட்டையர்களின் தேசமாக மாறியிருக்கும். மொட்டை மூளைக்கு நல்லது என்று ஒரு கும்பலும், அரசு மக்களுக்கு மொட்டை போட்டு விட்டது என்று எதிர்க்கட்சிகளும் பிரசாரிப்பர். பெண்கள் எலுமிச்சை சாத பவுடர், புளிசாத பவுடர், உப்புமா பவுடர், கேசரி பவுடர் என வாங்கி குவித்திருப்பர். சில பெண்கள் இரண்டு மாதம் டைவர்ஸ் வாங்கி கொண்டு ஓடிப்போயிருப்பர். புது மருமகன்கள் அனைவரும் மாமியார் வீட்டுக்கு சென்று தங்கிக் கொண்டு குந்தித் தின்று குன்றை கரைத்து வயிற்றை தள்ளிக்கொண்டு அலைவர். ஐடி நிறுவனங்கள் தாலி போன்று ஒரு வஸ்துவை கண்டுபிடித்து எம்பிளாய்ஸ் கழுத்தில் கட்டி “எப்ப சாப்பிடுறான், எப்ப வேலை செய்றான்” என்று கண்காணிப்பர். அரசு வழக்கம் போல டாஸ்மாக் உண்டு இல்லை. ஆன்லைன் கிளாஸ் உண்டு இல்லை னு வெள்ளாடிட்டு இருக்கும். கொரோனா நுழையாமல் அமெரிக்காவை சுற்றிப் டிரம்ப் சுவர் எழுப்பி இருப்பார். சீன ஊடகங்கள் வழக்கம் போல கொரோனா பத்தி பேசுன டாக்டரை காணோம். லேபை காணோம்னு தேடிட்டு இருக்கும். “சரி இந்த பதிவுக்கு எப்படி பின்னூட்டங்கள் வரும். அதையும் சொல்” என்று விக்கிரமாதித்தன் கேட்க வேதாளம் தயங்கியது. “பரவாயில்லை சொல் நம்ம புள்ளிங்கோ தான். கோவிக்க மாட்டார்கள்”. “போன பதிவிற்கு பின்னூட்டங்கள் இட்டவர்களின் அதே வரிசையில்” P Muthu Swamy அருமை Srikanth Jayaraman அசோக் அண்ணே பக்கத்துல தொங்குற பெண் வேதாளம் யாரு ? Selvaprakash Nattudurai வேதாளத்தைவென்றவிக்கிரமாதித்தனேவிந்தையை விதைத்தவித்தகனேவெளுத்துட்டீங்க…. Suja Sujatha பிரமாதம் ப்பா Neela Alangudy இதேபோன்று நண்பர் கந்தசாமி பத்தாவது படிக்கும் நண்பர்களுக்காக வேதாள வித்துவான் என்ற புத்தகம் எழுதி கருத்துக்களை தொங்க விட்டிருக்கிறார். ரொம்ப நேரம் தலைகீழா தொங்காதீங்க. மூளை சரியாயிடும். அப்படியும் ஆகலைன்னா நாளைக்கு நான் ஒரு போட்டோ போடுறேன். Thiruppathi Vasagan அட்டகாசம் நண்பரே. பிரமாதமாக வந்திருக்கிறது. 😁😁😁💐💐💐💐💯💯💯💯💯 Shanthirajasheker Shanthi Life is like that. Men have to hang in front of wives Lasyaa சூப்பர் பாஸ். அம்மைநாதன் சித அண்ணா கலக்கல்.. Anuradha Prasanna எப்போதும் மரத்துல ஏறி இந்த அசோக வேதாளத்தை வெட்றதுக்கு மரத்தையே வெட்டித் தள்ளியிருந்தா வேதாளத்தை வாக்கிங்கிலயே கூட்டிட்டு போயிருக்கலாம். TK Vidhya Kannan இப்படி லீவு கிடைக்குமென முன்பே தெரிந்திருந்தால் கொஞ்சம் தயாராக இருந்திருக்க முடியும். சரி எந்த இடத்துல தொங்கிட்டு இதையெல்லாம் யோசிச்சீங்க.. Joseph Alex நம்மளும் தொங்குறோம்.. படிச்சிட்டு. Padma Sundaram ஆபீஷ்ல உப்புமா பவுடரெல்லாமா கிடைக்குது ? ஆபீஸ் எங்கேயிருக்கு.. Kalai Kalaiselvi சூப்பர் சகோ. எங்கியோ போயி தொலஞ்சி போயிட்டீங்க. Anandhi Jeeva தபூ சங்கரை கொன்னுட்டு வேதாளமாயிட்டீங்களா. இந்தா வர்றேன்.

Read More
நன்றிகள்…

நன்றிகள்…

கிரகங்கள் நேர்க்கோட்டில் அமைய, வால் நட்சத்திரங்கள் வரிசையில் நிற்க எனது பிறந்த நாள் என்ற உன்னத நிகழ்வு நேற்று மீண்டும் நிகழ்ந்தது. காலையில் கண் விழித்தபோது “பையன் பொறந்திருக்கான்”னு யாரும் கத்தவில்லை. டாக்டர் என் காலை பிடித்து தலைகீழாய் தூக்கவில்லை. எந்த நர்ஸும் குளிப்பாட்ட வரவில்லை. அதனால் நானே குளிக்கச் சென்றேன். ரசிகர்களின் ஆரவாரம், கட் அவுட்கள், போஸ்டர்கள் ஏதுமில்லை. நான் பிறந்த வருடத்தில் பிராண்டன் லீ இறந்தார். ஒரு வயதானபோது நிக்சன் இறந்தார். இது தொடர, மத்தபடி மோசமான நிகழ்வுகள் ஏதுமில்லை. பொதுவாக பிறந்தநாளில் நான் கேக் வெட்டுவதில்லை. எதற்காக கேக்கில் எச்சில் தெறிக்க மெழுகுவர்த்தியை ஊதி அணைத்துவிட்டு கேக்கை பிசைந்து அடுத்தவருக்கு தயிர் சாதமாய் தருவானேன். எதையாவது சாதித்த பின்னரே கேக்கை வெட்ட நினைப்பேன். இன்னும் காலம் இருக்கிறது. சிறுவயது தானே! ஆனால் இப்பெல்லாம் கேக் எளிதாக கிடைத்து விடுகிறது. ஆனால் “இத்தனை மெழுகுவர்த்தி வேணும்னா ரெண்டு நாள் முன்னாடி சொல்லிடுங்க. பாக்டரில இருந்து வரவழைக்கணும்” என்று கடைக்காரர் கோபப்படுகிறார். எல்லா மெழுகுவர்த்திகளையும் கொளுத்தினால் கொரோனோவுக்கு விளக்கேத்தியது போல இந்தியா ஒளிருகிறது. ஊதி அணைக்காமல் பேன் போட்டு அணைக்க வேண்டியிருக்கிறது. அதற்குப்பின் வெளிப்படும் புகையில் ஏதோ வீடு தீப்பிடித்து விட்டதோ என்று பயந்து பக்கத்து வீட்டுக்காரர்கள் ஓடி விடுகின்றனர். அதுவும் நேற்றைய பிறந்த நாளில் அண்ணாச்சி விளம்பரம் மாதிரி ‘பக்கத்து வீட்டில கொரோனா இருக்கு. எதிர்த்த வீட்டில் இருக்கு. உங்க வீட்டில் இருக்கானு’ அரசு கேட்டுட்டு முழு ஊரடங்கு செய்துவிட்டதால் அமைதியோ அமைதி.நேற்றும் முதல் ஒரு மணி நேரம் பரபரப்பாய் போன்கள் தொடர, சரவணா ஸ்டோர்ஸ் ஓனர் போல சிங்க நடை போட்டேன். அதற்கப்புறம் ‘துணிய இன்னும் காயப் போடலையானு’ அசரீரி கேட்க புழக்கடைக்கு வந்தா எதிர்த்த வீட்டு பெரிய மீசைக்காரர் சேலையை நீவிநீவி காய வச்சிட்டிருந்தார். நான் அவரை வேடிக்கை பார்க்க, ஒரு ஆம்பளையோட மனசு ஆம்பளைக்கு புரிந்தது. அவரு அசடு வழிய அவரு போனதும் நான் காயப் போட்டேன். வயதில் ஒரு வருடம் கூடினால் நான் எப்போதும் வருத்தப்படுவதில்லை. அதை நண்பர்களின் வயதில் சேர்த்து விடுகிறேன். எனினும் நேரம் ஒதுக்கி முகநூலில் கவிதை எழுதியவர்களுக்கும், போஸ்ட் பதிவிட்டவர்களுக்கும், நிஜத்தை விட நிழலை அழகாய் பென்சிலில் வரைந்தருளிய இருவருக்கும், போன் செய்த கோடான கோடி அன்பர்களுக்கும் நன்றி கூறும் இதேவேளையில், சந்தடி சாக்கில் “அண்ணே” என்று வாழ்த்திட்டு அவர்களின் வயதை குறைத்துக் கொண்ட எதிர் கட்சிக்காரர்களுக்கு கண்டனத்தையும் பதிவிட்டு, இது திரும்ப வட்டியுடன் செலுத்தப்படும் என்று கூறிக்கொண்டு அனைவருக்கும் மனமார்ந்த நன்றிகளைக் கூறிக்கொள்கிறேன். நன்றி. வணக்கம்.

Read More
T for Tea/Training..

T for Tea/Training..

எங்க ஆபீஸ்ல எந்த ஒரு ட்ரைனிங்க்கு ஒருவரை தேர்ந்தெடுத்தால் அதற்கான பட்டியலை A for Ashok னு தொடங்குவாங்க. ஒருமுறை ITC Grand Chola ட்ரைனிங்கில் என்னையும் சேத்திருந்தார்கள். இந்த வயதில் அசையாம ஒரு இடத்துல உட்கார சொல்வதென்னமோ ‘சல்மான் கானிடம் சட்டைய கழட்டாம நடின்னு’ சொல்ற மாதிரி. நான் மறுபடி ஸ்கூலுக்கு போற மாதிரி ரெடி ஆனேன். தலைமுடிக்கு 100 மில்லி தேங்காய் எண்ணெய், முகத்தில் 50 கிராம் பவுடர், நெற்றியில் ஒரு பொட்டு. அப்படியே நெற்றியில் ஒரு சுருளுடன் எனது பள்ளிக்கு சாரி ஹோட்டலுக்கு போனேன். அதென்னமோ அந்த வாட்ச்மேன் என்னை உள்ளே விடுறதுக்கு முன்னாடி என் ஐடி கார்டையும் என்னையும் அத்தனை தடவ பார்த்தேன். கண்ணு தெரியலை போல. நான் பழக்கதோஷத்தில் போயி கடைசி பெஞ்சில் உட்கார்ந்துக்கிட்டேன். அது இந்திய மற்றும் வெளிநாட்டு அரசின் ஜாயிண்ட் ட்ரைனிங் கோர்ஸ். பாடம் நடத்த வந்தவங்கெல்லாம் 7 அடிக்கு குறையாம இருந்தாங்க. குட் மார்னிங் சா..ர் னு சொல்றதையே மைக்ல சொன்னாதான் அவங்களுக்கு கேட்டதுனா பார்த்துக்குங்க. டீசண்டா போகணும்னு மூஞ்ச நல்லா ஷேவிங் பண்ணிட்டு போனா, அங்க வந்த எல்லா வெளிநாட்டு வாளும் தாடியோட திரியிறாங்க. சும்மா ஒவ்வொருவருக்கும் சில்வெஸ்டர் ஸ்டேலன் இல்லாட்டி அர்னால்டு மாதிரி உடம்பு. ஒருத்தர பிரிச்சா 2 அசோக்கு பண்ணலாம். ஸ்டைலா அவங்க பேசுனப்பெல்லாம் நான் இங்கிலிஷ் படம் பாக்கிற பழக்கதோஷத்தில தமிழுல எழுத்து போடுவாங்களோன்னு வயித்த பார்த்துக்கிட்டு இருந்தேன். நல்ல வேலையா லேடி டீச்சர் யாருமில்லை. சும்மா ட்ரைனிங்கெல்லாம் பக்காவா பிளான் பண்ணியிருந்தாங்க. மதிய சாப்பாட்டுக்கு முன்னாடி ஒரு டீ பிரேக். பின்னாடி ஒரு டீ பிரேக். சோழ நாடுன்னாலே சோறுடைத்து. அதனால என் மனசெல்லாம் மதிய சாப்பாட்டையே நினைத்திருக்க, எனக்கும் மதிய சாப்பாட்டிற்கு நடூல ரெண்டு வாத்தியார் இருந்தாங்க. கோர்ஸிலேயே சிறந்த விஷயம் என்னான்னா எல்லா நேரமும் டீயும், பிஸ்கட்டும் ரெடியா இருந்துச்சி. ஏதாவது டவுட்டுன்னா கேள்வி கேளுங்கன்னு சொன்னாங்க. நமக்கு தெரியலைன்னு ஏன் காட்டிக்கணும்னு நான் கடைசி வரைக்கும் கேள்வியே கேட்கலை. வெளி நாட்டிலருந்து வந்த புள்ளிங்கோ வேற. மரியாதை தரணுமில்ல. ஒவ்வொரு டேபிளிலும் வாட்டர் பாட்டில், கிளாஸ், 10 சாக்லேட் வச்சிருந்தாங்க. எல்லா பக்கத்துலருந்தும் கத்துக்கணும்னு நான் மூன்று முறை இருக்கையை மாற்றிக்கிட்டேன். அடுத்த நாள் சாக்லேட் வைக்கலை. மதிய சாப்பாட்டுக்கு பின் எனக்கு கேட்டதெல்லாம் தாலாட்டு மட்டும் தான். அமெரிக்க தாலாட்டு. சொல்ல மறந்துட்டனே. இவ்வளவு சாப்பாட்டுக்கும் இடையில் பாடமும் நடத்துனாங்க.

Read More
என் இசைப்பயணம்… 🎵

என் இசைப்பயணம்… 🎵

 என் இசைப்பயணம்… 🎵 எதையும் முன்கூட்டியே பிளான் பண்ணி செய்யும் முன்ஜாக்கிரதை முத்தண்ணாவாகிய நான், நிறைய ஆராய்ச்சிகளுக்குப் பிறகு சேலத்திலிருந்து சென்னை வருவதற்கு KPN பஸ் சேவையை தேர்ந்தெடுத்து பஸ் டிக்கெட்டை ஒரு வாரம் முன்னரே பதிவு செய்திருந்தேன். செமி ஸ்லீப்பர், வோல்வோ ஏசி பஸ் மற்றும் ஜன்னல் இருக்கை. இரவு பயணத்திற்கு வேறென்ன வேண்டும். இரவு 11.00 மணிக்கு பஸ்ஸிலேறி சீட்டில் அமர்ந்த சிறிது நேரத்தில் எனது பக்கத்து இருக்கையில் மெல்லிய ஆசாமி ஒருவர் வந்தமர்ந்தார். எலும்பானவரை பார்த்ததும் எனக்கு மிகுந்த மகிழ்ச்சியாகி விட்டது. பொதுவாக இரண்டு பேர் அமரும் இருக்கைக்கு நடுவிலிருக்கும் கை வைக்கும் கட்டைக்கு ஒரு பனிப்போர் நடக்கும். இனி ஆர்ம் ரெஸ்ட் என்னுடையதென நன்றாக ஜிம் பாடி மாதிரி நெஞ்சை விரித்து அமர்ந்துகொண்டேன். வண்டி மெதுவாக கிளம்பியது. சற்றுநேரம் பயணித்து விட்டு சற்று கண்ணயர்ந்தேன். திடீரென்று ஒரு கிறீச்சிடும் ஒலி கேட்க, பஸ் ஆக்சிடன்ட் ஆகி விட்டதென்று பயந்து கண்களை விழித்தேன். அனைத்தும் ஒருகணம் அமைதியாய் இருக்க, மீண்டும் அந்த கர்ஜனை ஒலி எனக்கு அருகிலிருந்த அரை ஜாண் உடலிலிருந்து எழுந்தது. இவ்வளவு மெல்லிய தேகத்தில் எப்படி இவ்வளவு கர்ண கடூரமான குறட்டை ஒலியென்று அதிர்ந்து போனேன். எனக்கு வந்த கடுப்புக்கு ஓங்கி மூஞ்சிலேயே ஒரு குத்து விடலாமென தோன்றியது. இத்தனூண்டு மூக்கை வச்சிக்கிட்டு எப்படி நாதஸ்வரம் ஊதுகிறார் என்று அதிச்சியுடன் நான் பார்க்க மீண்டும் அவர் ஒரு முறை ஊதினார். இதுவரைக்கும் நீண்ட மூக்கையுடைய யானைகள்தான் இப்படி பிளிறி பார்த்திருக்கிறேன். எப்படி இந்த பிரச்னையை சமாளிப்பதென நான் யோசித்திருக்க மற்றவர்கள் அனைவரும் எதுவும் நடக்காதது போல் உறங்கிக் கொண்டிருந்தனர். மீண்டுமொரு முறை அவர் துருப்பிடித்த டிராயரைத் திறந்து, மூடுவது போல ஒலியெழுப்பினார். நான் பஸ்ஸின் குலுக்கலில் குலுங்குவது போல அவரை வேண்டுமென்றே ஒருமுறை இடிக்க, குறட்டை நின்றது. சற்று நிம்மதியாகி கண்களை மூடிக்கொண்டு தூங்க முயன்றேன். மீண்டும் சிறிது நேரத்தில் கப்பல் கிளம்பும் சைரன் ஒலி கேட்க, இந்த தடவை செம டென்சன் ஆனேன். அவர் விதவிதமாய் உறுமிக்கொண்டிருக்க, பஸ்ஸின் மேலிருந்த பையை அவர்மேல் தள்ளிவிடலாமா என்று யோசித்தேன்.அதற்கு பதிலாக நான் அவரை எழுப்பி “என்னங்க இவ்வளவு சத்தமா குறட்டை விடுறீங்க” என்று சொல்ல,அவர் வெட்கத்துடன் “சாரி. என் மனைவியும் இதைத்தான் சொல்வாள்” என்றார்.“எப்ப திருமணம் செஞ்சீங்க?”“ஒரு மாதமாகுது”‘அனேகமா சீக்கிரம் ஓடிப்போய்டுவாள் அல்லது விவாகரத்து கேட்பாள்’ என்று நினைத்துக்கொண்டேன்.நான் அவரிடம் “அவங்க எப்படி சமாளிக்கிறாங்க?”“அவள் வேற ரூமில் படுத்துக்குறா”‘நானா இருந்தா பிளாட்பார்மில் படுத்தாலும் படுப்பேன். இந்தாளோட படுக்கமாட்டென’ என நினைத்தேன். மனிதர்கள் குறட்டை விட்டு பார்த்திருக்கேன். ஆனால் இது வேற லெவல். நகங்களால் சுவரை சொறியறது மாதிரி இல்லாட்டி கான்கிரீட் தரையில் எஃகு அலமாரியை இழுப்பது போல. மீண்டும் தூங்க முயன்றோம். உண்மையில் நான் முயற்சித்தேன், அவர் தூங்கினார். ஐந்து நிமிடங்களுக்குப் பிறகு, மீண்டும் அவர் ட்ரெயின் ஹாரனை அலறவிட, நான் திரும்பி அவரது வாயைப் பார்த்தேன். சப்மரைன் மாதிரி காற்றை இழுத்தவர், காற்றை வெளியேற்றியபோது அவரின் உதடுகள் நடுங்கின. மூன்று முறை கர்ஜித்தார், நாலாவது முறை உறுமினார். அவரின் இசைப் பிரவாகம் வழிந்தோட, பஸ்ஸில் அனைவரும் அமைதியாக உறங்கினர். ‘காது கேட்காதவர்கள்’ பஸ்ஸில் இருக்கிறானா என்று சந்தேகம் வந்தது.திடீரேன முன்னிருக்கையில் இருந்தவர் வேறொரு சுதியில் குறட்டை விடத்தொடங்க, எனது இரவுப் பயணம் சிவராத்திரி ஆகி விட்டது புரிந்தது. என் காதை சுற்றி டர்பன் மாதிரி துணி கட்டி சர்தாராகிப் பார்த்தேன். பயனில்லை. தலை, மூஞ்சு, முகரையெல்லாம் எகிப்த் மம்மி மாதிரி துணி சுற்றி பார்த்தேன். வேஸ்ட். காதில் பஞ்சு வைத்து பார்த்தேன். பேசாம அவரோட மூக்கில் பஞ்சு வைச்சு பார்க்கலாமா என்று ஐடியா வந்தது. மறுபடியும் அவரை ஒருமுறை இடித்தேன். குறட்டை சிறிது நேரம் நின்றது. பின்னர் மீண்டும் அவர் புதிய உத்வேகத்துடன் குறட்டை விட தொடங்கினார்.போனை எடுத்து “குறட்டை விடும் நபரிடமிருந்து தப்பி உயிர் வாழ்வது எப்படி?” என கூகிளில் தேடினேன். அது “குறட்டை விடும் கணவனிடமிருந்து தப்பி பிழைப்பது எப்படினு காட்ட, என் கணவரை(!) செகண்ட் பார்த்துக்கிட்டேன். என்னவா இருந்தா என்ன. கூகிள் தந்த ஐடியாக்கள்..(i) அவரை அசைக்கவும் – நான் பேசாம அவரை பஸ்ஸிலிருந்து அசைத்துத் தள்ளிடலாமான்னு பார்த்தேன்.(ii) மூக்கில் கிளிப் போடவும் – நான் அவரின் கழுத்தில் கயிறு போட்டு இறுக்கலாமான்னு நினைத்தேன்.(iii) அவரது தலையின் கீழ் பெரிய தலையணையைப் பயன்படுத்துங்கள் – நான் அவரோட மூஞ்சிமேல் தலையணையை வச்சி அழுத்தி பிடிக்க விரும்பினேன். குறட்டை நிற்கும்வரை அழுத்திப் பிடிக்கனும்.(iv) அவரை சூடான குளியல் போட சொல்லுங்கள், அவரை புரிந்து கொள்ளுங்கள், படுக்கையை மாற்றுங்கள், தலையணையை மாற்றுங்கள் இப்படி பல வழிகளை கூகிள் சொல்லியது.எனக்கென்னமோ கணவரை மாற்றுவது தான் சிறந்த வழின்னு தோணியது. அதற்குள் மேலும் இரண்டு பயணிகள் வெவ்வேறு சுதி, சுருதியில் தொடங்க பஸ்ஸில் ஆர்கெஸ்ட்ரா தொடங்கியது. ஒரு பெண்ணும் அவர் பங்குக்கு குறட்டை விடத் தொடங்கினார். 33%னு சொன்னதை தப்பா புரிஞ்சிக்கிட்டார்னு நினைக்கிறேன். ஒவ்வொருவரும் வெவ்வேறு ஒலியை எழுப்பினர். உலகத்திலிருக்கும் எல்லாருக்கும் கைரேகை மாதிரி குறட்டை ஒலியும் வெவ்வேறு போல. ஒருவர் மேலேறியபோது மற்றொருவர் கீழிறங்கினார். எனக்கு விலங்குகளுக்கு மத்தியில் மிருகக்காட்சிசாலையில் தூங்குவது போல் இருந்தது. என் பின்னாலிருந்த குண்டு மனிதர் காற்றை இழுத்து சத்தத்துடன் ஊதியபோது எனது தலைமுடி பறந்தது. பஸ்ஸின் எல்லா இடங்களிலுமிருந்தும் ஒலியும், ஒலியும் கேட்கத் தொடங்க, குறட்டையர்களுக்கான பஸ்ஸில் டிக்கெட் புக் பண்ணிட்டனானு எனக்கு சந்தேகம் வந்தது. ஒருவர் அரிசி போட்டு வாயிலேயே மாவு அரைத்தார். ஒருவர் விமானத்தை தரையிறங்கிக் கொண்டிருந்தார். ஒருத்தர் ரம்பத்துக்கு சாணை பிடித்துக்கொண்டிருந்தார். பஸ் குலுங்கினால் அனைவரும் நல்ல பிள்ளையாகி விட்டு, சிறிய இடைவெளிக்கு பின்னர் மீண்டும் கச்சேரியை தொடங்கினர். நான் எழுந்து பஸ் டிரைவரிடம் சென்று “ஐயா இந்த கிளீனர் மாதிரி ஏதாவது வேலை செய்றதுனாக்கூட பரவாயில்ல. இங்கயே உட்காரட்டுமான்னு” கேட்க, அவர் பரிதாபப்பட்டு அவரின் உதவியாளருடன் உட்கார அனுமதித்தார். “எப்படிங்க இந்த சத்தத்தில தூங்குறது?” னு நான் கேட்க, “இது பரவாயில்ல. போனவாரம் ஒரு ஆளு போட்ட கொரட்டைல நான் பஸ்டயர் வெடிச்சிடுச்சினு கீலெல்லாம் இறங்கி செக் பண்ணினேன்” என்றார். இந்த நாடும், நாட்டில் குறட்டை விடுபவர்களுக்கு நல்லா இருக்கட்டும் என நினைத்துக்கொண்டு நிம்மதியாக சாஞ்சி உட்கார்ந்துக்கிட்டேன்.பஸ்ஸுக்குள் ஜுராசிக் பார்க்கிலிருந்து தப்பிய அனைத்து விலங்குகளும் ஒன்றையொன்று சாப்பிட முயன்று கொண்டிருக்க நான் அமைதியாகி மெதுவாக கண்களை மூடினேன். எனக்கு அருகிலிருந்த உதவியாளர் குறட்டை விடத் தொடங்கினார்.

Read More
நான் தாடி வளர்த்த கதை.

நான் தாடி வளர்த்த கதை.

நான் தாடி வளர்த்த கதை. சுந்தர் பிச்சை போன்று வாழ்க்கையில் சாதித்தவர்கள் எப்படி சாதனை செய்தார்கள் என எழுதுவது வாடிக்கை. எனக்கெல்லாம் தாடி வளர்ப்பதே வாழ்நாள் சாதனை ஆயிருச்சு. சிறுவயதிலேயே முடிக்கும், மூளைக்கும் தொடர்பு இருக்குறத கண்டுபிடிச்சேன். ஏன்னா எல்லா விஞ்ஞானிகளும் நெஞ்சு வரைக்கும் தாடி வச்சிருப்பாங்க. தாடியை நீவினால் மூளை நன்றாக வேலை செய்யும். தாடி உள்ளவர்கள் அறிவாளிகள் என்பதால் பெண்களுக்கு தாலி மாதிரி, எனக்கு தாடி கனவாக இருந்தது. பெரியார் தாடி போல பெரியதா இல்லாவிட்டாலும், சின்னவர் கமல் மாதிரி சின்னதா ஆட்டுத் தாடியாவது வளர்க்க ஆசைப்பட்டேன். அதென்னமோ வள வளன்னு எண்ணெய் பூசியிருக்க மொட்டை தலையர்களுக்குத்தான் தாடி நல்லா முளைக்குமா இல்ல, தாடி முளைக்க கம்ப்யூட்டர் படிக்கணுமா தெரியல. மொத்தத்தில் எனக்கு முகத்தில் எந்த ராஜாவும் முளைக்காது. தாடி என்பது ஐந்து வகைப்படும்.குறிஞ்சி : மலை போல் முடியும், முடி சார்ந்த பகுதியும். பொமரேனியன் நாய் போல் உடலெல்லாம் முடி பூத்துக் குலுங்குவது. நெஞ்சிலேயே சடை பின்னலாம். முகத்தின் ஒண்ணாம் பக்கம் சேவ் பண்ணிட்டு, ரெண்டாம் பக்கம் சேவ் பண்ணும்போதே மீண்டும் ஒண்ணாம் பக்கத்துல முடி முளைக்க ஆரம்பிச்சிடும். முல்லை : காடு மாதிரி சாட்டை சாட்டையை முடி வளருவது. “வாடா என் மச்சி, வாழக்கா பஜ்ஜி”னு முடிய ஆட்டி, ஆட்டி, பாடலாம். ஒரு நாளைக்கு ரெண்டு தடவ சேவ் பண்ணனும். அப்பயும் முகத்தில் கருமை படர்ந்து இருக்கும்.மருதம் : அனைவரும் பொறாமை படும் மாதிரி அளவா முடி முளைக்கும். விதவிதமா ரவுண்டு தாடி, பிரென்ச் தாடி, மட்டன் சாப்ஸ் தாடி, ஹேன்ட்டில் பார் மீசை, டூத் பிரஷ் மீசைனு முனியாண்டி விலாஸ் மாதிரி எப்படி வேணும்னா வச்சி கலக்கலாம். வீட்ல நெருப்பு புடிச்சா மொதல்ல தாடிய காப்பாத்திட்டு அப்புறம் தான் பொண்டாட்டியாவே காப்பாத்துவாங்க. நெய்தல் : சின்ன பையன்களுக்கு முளைக்கிற அரும்பான பூனை முடி. எங்க, இப்பெல்லாம் பத்தாவது பையன்களுக்கே கரடி மாதிரி முளைக்குது.பாலை : இது என் போன்றவர்களின் அபலை ஜாதி. இந்த ரக ஆண்களெல்லாம் பஞ்சாப்ல பொறந்திருந்தா ஒரு நல்ல சர்தாரோட கல்யாணம் பண்ணி வச்சிருவாங்க. சிலருக்கு பாலைவன சோலை மாதிரி ஆங்காங்கே திட்டு திட்டா காணப்படும். இதில ஒரே வசதி என்னான்னா அடிக்கடி சேவ் பண்ணாததால் முகம், மொகரக்கட்டை ஆகாது. இளசாவே இருக்கும். என் நண்பர்கள் ஒருநாள் சேவிங் பண்ணாவிட்டாலும் மூஞ்சு பலாப்பழம் மாதிரி ஆகிடும். ஆனால் எனக்கு முகத்துல முடி முளைப்பதற்குள் அத்திவரதர் இன்னொருமுறை குளத்துக்குள்ள போயிட்டு வந்துடுவார். அப்படியும் முகத்தில முளைக்கிற முடி முகத்தில் படர்ந்து வராமல் ஒவ்வொரு முடியும் நவகிரங்கள் மாதிரி ஒவ்வொரு பக்கமும் பார்த்துக் கொண்டிருக்கும். நானும் ஐந்தாண்டு திட்டமெல்லாம் போட்டு எருவா மாட்டின், முட்டை சாப்பிட்டேன், அடிக்கடி சேவ் செய்து பார்த்தேன். நல்லா தாடி முளைச்சா என மைத்துனருக்கு அலகு குத்துறதா கூட வேண்டிக்கிட்டேன். எந்த பிரயோஜனமும் இல்லை. தலைக்கு ஷாம்பு போட்ட கையோட தாடிக்கும் ஷாம்பு போடுற பரம்பரை என்னுது. எனக்கு மட்டும் பிடரி இல்லாததால வரியில்லா வரிக்குதிரை மாதிரி ஒரு உணர்வு. தன் முயற்சியில் சற்றும் மனம்தளரா விக்கிரமாதித்தன் போல மறுபடியும் பத்து நாட்கள் சேவ் செய்யாம முடி வளர்த்தேன். பார்ப்பவர்கள் எல்லாம் “ஏங்க உடம்பு, கிடம்பு சரி இல்லையா? குடும்பத்தில் ஏதும் பிரச்சனையா?”னு கேட்கவும், உடனே தாடியை அழகு படுத்தி கொள்ள ஒரு சலூனுக்கு ஓடினேன். நான் : தாடியை சரி பண்ணனும். (அவன் என்னை கரப்பான் பூச்சியை பார்ப்பது போல் பார்க்க).நான் : (சின்ன சிரிப்புடன்) முடி கொஞ்சமா தான் இருக்கு. என்ன பண்ணா நல்லா இருக்கும்?அவன் : சேவ் பண்ணிடுங்க நல்லா இருக்கும்!நான் : அது இல்லப்பா. ஸ்டையிலா french beard, mutton chops மாதிரி தாடி வைக்க முடியுமா ?அவன் : அதுக்கெல்லாம் முடி இருக்கணுங்க (அதை ஏண்டா மூளை இருக்கணும்ங்குற மாதிரி சொல்லுற )நான் : இந்த முடிய வச்சி என்ன பண்ணலாம்?அவன் : கன்னத்துல சின்னதா மரு வச்சுக்குங்க.நான் : நீ மொதல்ல பலூனை சேவ் பண்ணி கத்துக்க. உன்கிட்ட வந்ததுக்கு ஆசாரி கிட்ட போயிருந்தா இந்நேரத்துக்கு தாடியை இளைச்சிருப்பேன். விடுங்க. தாடியெல்லாம் ரௌடிங்க உடுறது. கன்னத்துல தழும்பை மறைக்க, எலும்பு கூடு மாதிரி மூஞ்சி ஒட்டிப்போய் இருக்குறவங்க வச்சிக்கிறது. நம்ம மாதிரி குழந்தை முகம் இருப்பவங்களுக்கு வேண்டாம்.

Read More
மனைவியை ஜெயிப்பது எப்படி

மனைவியை ஜெயிப்பது எப்படி

➕ மனைவியை ஜெயிப்பது எப்படி… பொறுப்பாகாமை (Disclaimer) :(இது என் வாழ்க்கையில் நடப்பவையோ, நடந்தவையோ அல்ல. எனவே என்னை வைத்து கும்மி அடிக்க வேண்டாம் என இறைஞ்சுகிறேன்.) பெண்களை நான்கு வகையாக சாமுத்திரிகா சாத்திரம் பிரிக்கிறது. பத்மினி, சித்தினி, சங்கினி, அத்தினி என. ஆனால் கல்யாணம் ஆனதும் பெண்ணின் உடலில் உள்ள ஸ்லீப்பர் செல் எல்லாம் கண்ண முழிச்சிட்டு, முட்டையிலிருந்து வளரும் டைனோசர் போல் ஐந்தாவது பிரிவு தோன்றும். அது பத்தினி. இது இரண்டு வகைப்படும். தர்ம பத்தினி, அதர்ம பத்தினி என. கணவனின் கண்ணில் கண்ணீர் வராமல் பார்த்துக் கொள்பவள் தர்ம பத்தினி. இந்த வகை புராணங்களில் வரும் பத்து தலை ராட்சசன், ஒற்றை கண் பூதம் போல. நம்ம கிரகத்தில் கிடையாது. கணவனின் கண்ணில் இரத்த கண்ணீர் மட்டும் வராமல் பார்த்துக் கொள்பவள் அதர்ம பத்தினி. இது நம்ம எல்லாத்துக்கும் பொருந்துவது. மனைவியின் சைஸ்ஸ பொறுத்து, அவுங்க ஓங்கி அடிச்சா ஒன்றை டன் வெயிட்டா, இல்ல அரை டன் வெயிட்டா என்பது இருக்கும். அடியின் வேகம் என்பது மனைவி புரூஸ்லீ மாதிரியா இல்ல ஜெய் சங்கர் மாதிரியா என்பதை பொறுத்து கூட, குறைய இருக்கும். அவ்வளவு தான். நல்ல குடும்பத்துல பொறந்த மனைவிங்க புருசனை கை நீட்டி அடிக்க மாட்டாங்க. அதுக்கு பதிலா இயற்கை அவுங்களுக்கு காளி சிலைக்கு இருக்க மாதிரி நீளமான நாக்கை படைச்சிருக்கு. சாட்டையவிட சற்றே நீளமான இந்த நாக்கை வச்சி ஒரு வீசு வீசினா கணவனின் மனம் மட்டுமல்ல, குடும்பம், சொந்தம், கிராமமே டோடல் டேமேஜ் ஆகும். அதனால தான் சிங்கமாக அலுவலகத்தில் கர்ச்சிக்கும் ஆண்கள் கூட வீட்டில் வாலில்லா பூனையாய் வலம் வருவது. மனைவி கல்யாணமான தினத்துல ஆரம்பிச்சு ஒவ்வொரு விஷயமா சொல்லி திட்டும்போது, கணவர்களுக்கு கோபம் வராது. ஒரு பிரமிப்பு வரும். சொன்னதும் நாய்க்குட்டி மாதிரி 40 நிமிஷம் லேட்டா வர்ற சூரியனை பார்க்குற மாதிரி. இதையெல்லாம் நியாபகம் வைத்துக்கொள்வதற்கு, இந்தம்மா படிக்கும்போது ஒழுங்கா பாடத்தை நியாபகம் வச்சிருந்திருந்தா, இன்னேரம் அமெரிக்காவுக்கு போயிருக்கும், நம்ம தப்பிச்சிருக்கலாமேனு. முன்பெல்லாம் தமிழகத்தில் பெண்கள் அஷ்ட லட்சுமிகளாக இருந்தனர். ஆனால் நம்மை ஆள்பவர்கள் பெரும்பாலான லட்சுமிகளை சுவிஸ் பேங்குக்கு அனுப்பி விட்டதால், இங்கு மீதம் இருப்பவர்கள் கஜ லட்சுமியும், வீர லட்சுமி மட்டுமே. இது தெரியாமல் ஆண்கள் கவிதையிலும், சினிமாவில் வரும் பூவையர், தேவதை, தையல் போன்ற வார்த்தைகளை கேட்டுட்டு திருமணம் செய்து கொள்ளும்போது, கஜா புயலில் சிக்கும் வாழை மரமாகி விடுகின்றனர். அதுக்கப்புறம் ஓடவும் முடிவதில்லை. ஒழியவும் முடிவதில்லை. புயல் மட்டுமே. முன்பெல்லாம் குடித்து விட்டு மனைவியை தாக்கிய கணவர் கைது னு பேப்பர்ல வரும். இப்பெல்லாம் கணவன் கொலை, மனைவி கைதுன்னு டெய்லி வருது. இப்படியே போச்சுன்னா IUCN வெளிவிடும் “அருகிவரும் இனங்கள்” பட்டியலுல தமிழ் நாட்டு புருஷனெல்லாம் வந்துடுவாங்கனு நினைக்கிறேன். இதையெல்லாம் தாங்க முடியாத சில வீரர்கள் துறவியாகி தெருத்தெருவா சுத்துனாலும் பரவாயில்லன்னு, தெறிச்சி ஓடி விடுகின்றனர். மற்றவர்கள் விருப்பு, வெறுப்புகளை துறந்து “இல்லத்துறவி”யாகி விடுகின்றனர். மனைவி என்பவள் “மனை”யின் ராணி. இல்லத்தரசி அதாவது இல்லத்து அரசி. கணவர்கள் (இல்ல கணவன்களே போதும்) கணவன்கள் எல்லாம் உணவு கொண்டு வரும் வேலைக்காரத் தேனி போல. எனவே மனைவியை சமாளிப்பது/ ஜெயிப்பது எப்படி என்பதை தெரிந்து கொள்வது கணவன்கள் உயிர் தப்பிக்க அத்தியாவசியமான ஒன்று. கடவுள் இருக்கிறார் என்பது ஒரு உணர்வு. தாமரை மலர்ந்தே தீரும், இந்தியா வல்லரசாகும் என்பது போல் ஒரு நம்பிக்கை. அதுபோல் மனைவியை ஜெயிப்பது என்பதும் ஒரு உணர்வு. நடைமுறையில் சாத்தியமே இல்லாத ஒன்று. எனினும் அத்தகைய உணர்வை சிறந்த பயிற்சியின் மூலம் நமக்குள் வளர்க்கலாம். இதுக்கு சில படிகள் இருக்கு. விட்டு கொடுத்தல் : வெட்கம், சூடு, சொரணை, மானம், மரியாதை, பிறந்த வீடு போன்றவைகளை விட்டுக் கொடுத்தல். மொத்தத்தில் மிக்சர் சாப்பிட்டுக்கொண்டு வாழ வேண்டியது. பகிர்ந்து கொள்தல் : வீட்டு வேலைகளை எல்லாம் கணவன்கள் பார்த்துக் கொண்டு, TV சீரியல் பார்த்து அழுவது, போனில் சொந்தக்காரர்களின் கவலைகளை கேட்டு சந்தோசப்பட்டுக்கொண்டே வருத்தப்படுவது போன்ற கடின வேலைகளை மனைவிகளிடம் விட்டு விடுங்கள். நித்ய சரணாகதி : அட சீ! படுத்தே விட்டானைய்யா! என்பது போல சரணாகதி அடைந்து விடுதல். முதுகெலும்பு, மீசை என ஒத்து வராதவற்றை கழட்டி வைத்து விட்டு, எப்படி திட்டினாலும் கண்டு கொள்ளாத சாந்த சொரூப நிலை. கொஞ்ச நாள் திட்டி விட்டு “இது வேஸ்டு” என்ற மனநிலைக்கு மனைவிகளை தள்ளுவது. கணவன்கள் செய்ய வேண்டியவை, செய்யக்கூடாதவை என இரண்டு பிரிவுகள் உள்ளன. செய் அல்லது செத்து மடி : அப்பப்ப புகழ்ந்து கொண்டே இருக்கவும். எதையாவது சொல்லி. நீ இந்த சேலையில் பார்க்க இங்கிலாந்து பிளேயர் பென் ஸ்டோக்ஸ் மாதிரி இருக்கே. (அவர் ஆம்பளை கிரிக்கெட் பிளேயர்னு நமக்கு தான் தெரியும்). இங்க பொய் சொல்லாத வாய்க்கு போஜனம் கிடையாது. எவ்வளவு மோசமாக சமையல் இருந்தாலும், துப்பாம விழுங்கி பழகவும். நல்ல சாப்பாடு சாப்பிடத்தான் வெளிய ஹோட்டல் இருக்கே. நண்பர்கள் கணவன்களை புகழ்வது மனைவிகளுக்கு சுத்தமாக புடிக்காது. உங்க பிரண்ட்ஸ் எல்லாமே லூசு தானா உங்கள மாதிரின்னு கேள்வி வரும். செய்யாத அல்லது செத்து மடி : மனைவியை கேட்காமல் மூச்சை கூட விடக் கூடாது. மொத்தத்தில் “சிவன் சக்தி” யாக வாழ்வது. அதாவது. கணவன்கள் அனைத்து சக்தியையும் மனைவிகளுக்கு தந்துவிட்டு “சிவனே”னு காலத்தை தள்ளுவது. மனைவிகள் சிங்கத்துக்கு பதிலாக கணவன்கள் மேல் அமர்ந்து “சக்தி”யாக வலம் வருவார்கள். இது ஒரு வாழ்க்கையா என கேட்காமல் இப்படியொரு வாழ்க்கையை வாழ்ந்தால் பூமியில் வாழும் நாட்கள் நரகமாய் இல்லாமல் இருக்கும். அப்புறம் ஏன் மனைவிகளை ஜெயிப்பது எப்படினு தலைப்பு வச்சேன்னு கேட்டீங்கன்னா, இப்படி ஒரு உலக அதிசயத்தை தலைப்பை வச்சா தான் படிக்கிறவங்களுக்கு ஒரு ஆர்வம் வரும் “இதென்னடா புதுசான்னு”. அதனால தான்.. மனைவிகள் மீண்டும் டிவி பார்க்க போங்க. கணவன்கள் மீண்டும் வெங்காயம் வெட்ட போங்க. இதை புரிஞ்சி நடந்துக்கிட்டா, இனியெல்லாம் சுபமே.

Read More
கணவர்களின் டைரி .

கணவர்களின் டைரி .

பெண்களின் “க்கும்” என்ற ஓசையின் அர்த்தத்தை புரிந்து கொள்வது திருக்குறளை புரிந்து கொள்வதை விட சிரமமாகத்தான் உள்ளது. வெண்டைக்காயை ஒடித்து பார்த்து வாங்குவது பிஞ்சா அல்லது முத்தலா என தெரிந்து கொள்ள அல்ல. வீட்டில் திட்டு வாங்காமல் இருக்கவே. தன் வீட்டில் powercut ஆனால் பக்கத்துக்கு வீட்டை பார்த்து விட்டு நிம்மதி அடைவதும் கணவனின் ஜென் நிலையே. அரசாங்கத்தை மயக்கி தமிழ் திரைப்பட வரிவிலக்கு பெற ‘மாசு’.ரசிகர்களை மயக்கி கவர்ந்திழுக்க ‘மாஸ்’.# இவ்வளவு தான் எங்க தமில் பற்று. பதினாறும் பெற்று பெருவாழ்வு வாழ்க ன்னு சொன்னா அந்த பதினாறுல “சிக்கன், மட்டன், காடை, கவுதாரி, மீன், நண்டு, எறா, மாடு, பன்னி, முயல், பாம்பு, பல்லி, ஒட்டகம், எலி மற்றும் மான் தான் வரும்னு நெனைக்கிறேன். வீட்டில் காலை டிபனாக தட்டில் ஒரு தோசைக்கு 3 சட்னி யை பார்த்தவுடன் பதறி போகிறது மனம்.ஏன் இந்த கவனிப்பு என ?! இது காலத்தின் மிச்சம் என மூளை உணர்த்தும் வரை. ஜவுளிக்கடையில் நம் தோற்றத்தை விற்பனையாலனும் சேலையின் நிறத்தை மகளும், தரத்தை தாயும்,விலையை தகப்பனும் பார்க்கிறார்கள். கடையில் வாங்கும் பரோட்டா, சிக்கன் குழம்புடன் தவறி வரும் ஒரு சிக்கன் பீஷின் சுவை, அடுத்த நாள் செய்யும் ஒரு கிலோ சிக்கனில் வராது. இதுவே உலக நியதி.

Read More