நிலா. பனிரெண்டாவது முதல் குரூப்பில் படிக்கும் பெண். சிவப்பான சருமம், சுருண்ட கேசம், சற்றே பூனைக் கண்கள். பூசினாற் போன்ற தேகம். செதுக்கிய நாசி. மொத்தத்தில் பெயருக்கேற்ற அழகானப் பெண். “மிக அழகான”. டாக்டராவது கனவு மற்றும் லட்சியம். அவசரமாக பள்ளிக்கு கிளம்பி கொண்டிருந்தாள். ஒரு நாள் கூட லீவ் போடாமல் போய் வருடக்கடைசியில் சர்டிபிகேட் வாங்குபவள். “அம்மா லஞ்ச் பேக் ரெடியா ?” “இருடி பேக் பண்ணிட்டேன். வாட்டர் பாட்டில்ல தண்ணி எடுத்துக்க” என்றாள் காயத்ரி. […]