சென்னையிலிருந்து போபாலுக்கு நடந்து செல்வதை நினைக்கும்போதே சுரேந்தருக்கு மலைப்பாயிருந்தது. டென்ட்டினுள் மனைவி ரேஷ்மி படுத்துக் கிடக்க, ஐந்து வயது மகனும், மூன்று வயது மகளும் விளையாடிக் கொண்டிருந்தனர். கட்டுமானப் பணிகள் செய்ய இவர்களுடன் வந்திருந்த மேலும் ஐந்து வடஇந்திய குடும்பங்கள் சென்னையில் தங்கியிருந்தனர். ஒரு கட்டிடம் கட்டி முடித்ததும் மற்றொரு கட்டிடத்திற்கு சூப்பர்வைசர் அழைத்துப் போவார். அங்கு டென்ட் அமைத்துக் கொள்வார்கள். போபாலை விட அதிக வேலை வாய்ப்பும், கூலியும் கிடைத்ததால் கடந்த நான்கு ஆண்டுகளாக சென்னையில் […]