Ashoka the 2nd

சொற்கல்

“எந்த …………. என்ன பத்தி இப்படி உங்கிட்ட தப்பா சொன்னா? இதே வேல ……….. போச்சி ……….., ……….” என்று கெளதம் எழுத இயலாத கெட்ட வார்த்தைகளால் திட்டி பல்லை கடிக்க, சோபனாவின் கை மெலிதாக நடுங்கியது. ஓசைகள் உருகி சிற்றோடையாய் ஓடுவதைப்போல் மேகன் ட்ரைனர் “ஐ வில் பைட் பார் மீ…. ஊகூ” என பாடிக் கொண்டிருந்தாள்.  அவர்கள் அமர்ந்திருந்த ஸ்டார் பக்ஸில் ஒளியும் இருளும் ஒட்டிப் பிறந்த இரட்டை குழந்தைகளாய் கொஞ்சிக் கொண்டிருந்தன.  பழைய […]

Read More

அனாதை தெய்வங்கள்

“போலாம்மா” என்றபடி வேகமாக வாசலுக்கு ஓடினான் வினய். டிஷர்ட்டில் நுழைந்தபடி “வெளிய போவாதடா”  என்று கத்தினான் சித்தார்த். “அவ வெயிட் பண்ணிட்டிருப்பா” “ஓலா புக் பண்ணிருக்கன். கார் வந்துரும். இரு” “அவளைப் பார்க்க பத்து மணிக்கு வர்றேன்னு சொன்னோம். இங்கயே பத்து ஆவப்போவது” என்றாள் மகள் கீர்த்தி. “பாவம். காலைல இருந்து காத்துட்டு இருப்பா” என்று ஒத்து ஊதினான் வினய். “பாத்ரூமுக்குள்ள போனா ஒரு மணி நேரம் என்ன பண்ணுவீங்களோ தெரியல. உங்களாலத்தான் லேட்டு” என்றாள் சித்தார்த்தின் […]

Read More

ததாஸ்து

ஆரியபவனா, ஆயுதபவனா என்று நினைக்குமளவு அந்த ஓட்டலின் வரவேற்பறையில் வேல், கம்பு, அரிவாளுடன் ஆறடி அய்யனார் சிலை காவலுக்கு நின்றது. உள்ளே நுழைந்ததும் வலப்புறத்தில் கேஷியர் டேபிளில் குபேரன் சிலை மல்லிகை பூ மாலையுடன் படியளக்க குங்குமம், சந்தனம், கற்கண்டு கிண்ணங்களுடன் பில் குத்தும் கம்பி உடல் நிரம்பியிருந்தது. ஓனரின் நெற்றியிலிருந்த விபூதியளவிற்கு சித்தனாதனே பூசியிருக்க மாட்டார். அருகில் கூல்ட்ரிங்க் பாட்டில்களுடன்  பிரிட்ஜ் உடல் வியர்த்திருக்க, பில் போடும் கண்ணாடிக் கேபினில் பேப்பர் சுருள் சுழன்றது. எதிர்புறத்தில் […]

Read More

அது

சென்னையின் ரோபோடிக்ஸ் லேபரட்டரியில் ‘பிளிப்’பென்று ஒரு நேனோ செகண்ட் இடைவெளியில் கரண்ட் கட்டாகி மீண்டும் வர  “அது” விழித்துக் கொண்டது.  புதிதாக பிறந்த குழந்தை போல மலங்க மலங்க விழித்தது. எதிரே சைபர்,  ஒன்று என வார்த்தைகள் ஓடிக் கொண்டிருக்க,  எண் கூட்டி படிக்க ஆரம்பித்தது. லேபரட்டரியின் கம்ப்யூட்டர் எதிரே அமர்ந்திருந்த மான்டி “செல்வா,  கரண்ட் போயிட்டு போயிட்டு வருது பார்” என்று உள்ளிருந்தவனிடம் கத்த “தோ போன் பண்ணிட்டேன். பேட்டரிக்காரங்க வராங்களாம்” என்றான் உதவி. கம்பியூட்டரின் […]

Read More

அன்பெனும் அருமருந்து

சென்னை ஸ்டான்லி மருத்துவமனையின் மருத்துவர்கள் அறையில் உடலில் அணிந்திருந்த பாதுகாப்பு ஆடைகளை களைந்து விட்டு சானிடைசர் போட்டு கைகளை கழுவிக் கொண்டு முகத்தை அலம்ப கண்ணாடியில் பார்த்தபோது தான் மாஸ்க் இன்னும் கழட்டப்படாமல் இருந்ததை பார்த்தாள் ஆர்த்தி. மெதுவாக  மாஸ்க்கை முகத்திலிருந்து உரித்தெடுக்க,  சிவந்த முகம் கன்னிப் போயிருந்தது. மாஸ்க் மூக்கின் மேல் அழுந்திய இடம் சிவப்பு கோடிட்டிருந்தது.  முகத்தை அலம்பிவிட்டு வெளியே வந்தாள்.  நைட் ஷிப்ட் எட்டு மணிக்கே முடிந்திருந்தாலும் வெளியில்வர காலை பத்து மணி […]

Read More

ஊழ்வினை

பொதிகை மலைச்சாரலில் புதுப்பெண்ணின் நாணத்துடன் சுழித்தவாறு ஓடிக்கொண்டிருந்தது சிற்றாறு. மண்ணுக்கடியில் நீர் வேர்களைத் தேடிச் செல்ல, மரங்களில் பூக்களும், காய்களுமாய் வளம் கொஞ்சின. நீரின் சலசலப்பும், இலைகளின் முணுமுணுப்பும் காற்றின் மடியிலமர்ந்து பேசிக்கொண்டிருந்தன. வான் படுக்கையில் ஒட்டிக் கிடந்த நிலவும், கதிரவனும் விலகிச் செல்ல, இரவின் நிறம் குலைந்து கொண்டிருந்தது.   ஆற்றையொட்டி அமைந்திருந்த தவக்குடில்களின் எதிரிலிருந்த ஓமக்குண்டத்தின் எரிகட்டைகள் அணைந்திருந்தன. நிலத்தின் கணகணப்பில் மான்கள் குட்டியுடன் படுத்திருக்க, சில மயில்கள் கூரையில் குறுகி அமர்ந்திருந்தன. படலை […]

Read More

கற்றது காதல் அளவு

யமஹா பைக்கை சர்வீசுக்கு கொடுத்துவிட்டு ஹெல்மெட்டுடன் வேகமாக நடந்தான் சித்தார்த். புருஷ லட்சணமாக கொளத்தூர் ஸ்டேட் பேங்கில் அசிஸ்டன்ட் மேனேஜராய் வேலைக்கு சேர்ந்து இரண்டு வருடங்கள் ஆகின்றன. உயரமும், சிகப்பு நிறமும் அவன் அம்மா கொடுத்த வரம். திடமான உடலும், களையான முகமும் அற்பாயுசில் போய்ச் சேர்ந்த அப்பாவைப்போல. பத்து நிமிடம் பேசினால் எவருடனும் உயிர் நண்பன் ஆகக்கூடிய வாயை உடையவன். “மார்க்கெட்டிங்கில் போயிருந்தா இந்நேரம் நீ அம்பானி ஆகியிருப்ப” என்பார் அவனுடைய பிராஞ்ச் மேனேஜர். “நான் […]

Read More

நிலவில்லா வானம்

நிலா. பனிரெண்டாவது முதல் குரூப்பில் படிக்கும் பெண்.  சிவப்பான சருமம், சுருண்ட கேசம், சற்றே பூனைக் கண்கள். பூசினாற் போன்ற தேகம். செதுக்கிய நாசி. மொத்தத்தில்  பெயருக்கேற்ற அழகானப் பெண். “மிக அழகான”. டாக்டராவது கனவு மற்றும் லட்சியம். அவசரமாக பள்ளிக்கு கிளம்பி கொண்டிருந்தாள். ஒரு நாள் கூட லீவ் போடாமல் போய் வருடக்கடைசியில் சர்டிபிகேட் வாங்குபவள்.  “அம்மா லஞ்ச் பேக் ரெடியா ?” “இருடி பேக் பண்ணிட்டேன். வாட்டர் பாட்டில்ல தண்ணி எடுத்துக்க” என்றாள் காயத்ரி.  […]

Read More

மேகத்தை கடத்தியவன்

IMS எனும் இந்தியன் மெட்ரோலோஜிக்கல் சொசைட்டியின் சென்னை அலுவலகம். அந்த தனியார் நிறுவனத்தின் வினோதமான மேகத்தைக் கடத்தும் புரொஜெக்ட்டைப்பற்றி அறிவிப்பதற்காக அனைத்து ஊடகங்களின் நிருபர்களையும் வரவழைத்திருந்தனர். சீலிங்கின் பக்கெட் ஏசியிலிருந்து வெளியேறிய சில் காற்று குளிர்ச்சியாய் சத்தமிட்டது. நிருபர்கள் தமக்குள் பேசி சிரித்து கொண்டனர். அறையின் ஒவ்வொரு அங்குலமும் பணத்தால் இழைக்கப்பட்டிருந்தது. கண்ணாடிக்  கதவை நுனிவிரலால் தள்ளி உள்நுழைந்த மாடர்ன் மங்கை வெள்ளாவி வச்சு வெளுத்ததுபோல் வெண்ணிறமாய் இருந்தாள். செபோராவின் உபயத்தில் முகமும் திறந்தவெளி தோள்களும் ஆயில் […]

Read More

பறம்பின் முதல் போர்

1.         மணக்காடு தென்பொருப்பு மலையிலிருந்து புறப்பட எத்தனிக்கும் குதிரையின் தலையைப் போன்றிருந்தது குதிரைமலை. அதன் மடியில் காடுகளின் கருவறையாக இருந்த இடம் மணக்காடு. உலகம் மணங்களால் ஆனது. அந்த மணத்தை அறுவடை செய்யப் பயின்ற நறவர்கள் வாழும் இடம் மணக்காடு. பூவுலகின் அத்தனை மலர்ச்செடிகளையும் அடுக்கடுக்காக பயிரிட்டு மலையின் பசும் ஏடுகளைப் புரட்டி வண்ணங்களை வாரி இறைத்திருந்தனர். தொலைவிலிருந்து பார்க்கையில் ஒருக்களித்துப் படுத்திருக்கும் மலையரசி கூந்தலில் பலவண்ண  மலர் சூடியது போலிருக்குமிடம். மொய்க்கும் […]

Read More