Ashoka the 2nd

புத்தக தினம்… – 2021

புத்தக தினம்…      –    2021

புத்தக தினம்…
மச்சினி தினம், மாமா தினம், கொரோனா தினம் என்று புதுசு புதுசா தினங்கள் வர, எல்லாரும் ஒரு அடிஷனல் பேப்பர் வாங்கி எழுதுமளவு படித்த புத்தகங்களை பதிவிட்டு எனது வரலாறை பதிவிட வேண்டிய அவசியத்தை ஏற்படுத்தி விட்டனர். இல்லையெனில் Tail on fire னு ஒரு சுயசரிதை எழுத உத்தேசித்திருந்தேன்.

இளமையில் அம்புலிமாமா, பாலமித்ரா, கோகுலத்துடன் என வாசிப்புகளை துவங்கி சில காலம் மாயாஜால புத்தகங்களில் குடும்பம் நடத்தினேன். ஐந்தாவது படிக்கும்போதே இரண்டு லைப்ரரி கார்ட் வாங்கி புத்தகம் படிக்க துவங்கியது முதல் நிகழ்வு. பரஞ்சுடர் மந்திர தண்டத்தை ஏந்தி குதிரையில் செல்லும் ஓசை எனக்கு இப்பவும் கேட்கும். அருகிலிருப்பவர்கள் மூணாவது முறை கூப்பிட்டு திட்டும் வரை.

சுஜாதா, பாலகுமாரன், சாண்டில்யன் என லைப்ரரியின் அத்தனை புத்தகங்களையும் படித்துவிட்டு, பைபிள், பகவத்கீதை, ராமாயணம் போன்ற புத்தகங்களில் தீட்சை பெற்றேன். பில்லி சூன்யம் வைப்பது எப்படி, பிளாக் மாஜிக் போன்ற புத்தகங்களையும் விடவில்லை. திருமணம் அவசியமா என்ற புத்தகத்தின் முடிவை யாரோ ஒரு கல்யாணமானவர் கிழித்து விட்டதால் விடை இன்னும் தெரியவில்லை. சமைப்பது எப்படி, பாத்திரம் கழுவுவது எப்படி என்பதை சாய்ஸில் விட்டேன். சங்கர்லால் அந்த காலத்து ஆஸ்தான ஹீரோ. Sujatha is my writer always.

முத்து காமிக்ஸ், லயன் காமிக்சில் மூழ்கியது இரண்டாவது அலை. முதல் தேதியானால் காத்திருந்து காத்திருந்து 10ம் தேதிக்குள் punctual க புத்தகம் வந்து விடும். இந்த வயதிலயும் காமிக்ஸ் புத்தகங்கள் மாதாமாதம் வீட்டுக்கு போஸ்டில் வர “யாருங்க வீட்ல காமிக்ஸ் படிக்கிற சின்ன பையன்?” என்று போஸ்ட்மேன் கேட்க, “என் பேரன்”னு சொல்லி அம்மா எனது மானத்தை காப்பாற்றுவது இன்னுமே தொடர்கிறது. ஆண்டவரே இந்த பாவிகளை மன்னியுங்கள். காமிக்ஸ் சுவையறியாத கடோத்கஜன்கள் இவர்கள். வயதாகாமல் தடுப்பதில் காமிக்ஸுகளுக்கு பங்குண்டு. Trust Me. Tex Willer is still my hero and Modesty Blaise is always my queen.

கிரைம், உங்கள் ஜுனியர் என்று சிக்குண்டிருந்தது சமகாலம். ராஜேஷ் குமார் சாரின் சுருள் முடிகளுக்குள் அல்ல. கதைகளுக்குள். இத்துடன் வெற்றி, கோனார் என கொஞ்சம் பாடங்களையும் பெற்றோரின் மிரட்டலுக்காக படித்து வைத்தேன்.

A rose by any other name would smell as sweet என்று சேக்ஸ்பியரின் மொழி பெயர்ப்பு கதைகளில் குதித்தது 11வதில் துவங்கியது. அப்புறம் Robert Ludlum, Sidney, Irwing Wallace, Chase, Robin Cook, Agatha Christie, Jeffrey, போன்ற ஆங்கிலேயர்கள் என்னை ஆண்டார்கள். Ludlum கதைகள் எனது சாய்ஸ். Kane and Abel புத்தகம் எனது கனவு புத்தகம்.

அதன் பின் புத்தகங்கள் படிப்பது குறைந்து நாட்டுக்கு நல்லது செய்து கொண்டிருந்தேன். எப்போதாவது சுஜாதாவின் கணேஷ், வசந்தினால் தமிழுடன் டச்சில் இருந்தேன்.

வேள்பாரி எனது பயணத்தை திசை திருப்பிய புத்தகம். தமிழ் அமுதத்தில் முக்குளித்து அதன் தாக்கத்தால் எழுதி பார்க்கலாமே என நீலனின் போர், செம்மாஞ்சேரல் போர் என வேள்பாரி மன்றத்திற்காக துவங்கியது எனது கன்னி எழுத்துகள். வேள்பாரி மன்ற ரசிகர்கள், பாரியின் பாணர்கள் என்ற whatsapp group நண்பர்கள் இவற்றை என்கரேஜ் செய்ய, எழுத முடியும் என்ற நம்பிக்கை தோன்றியது.

அதன் பின்னர் சோழவேங்கை கரிகாலன் என்ற புதிய சரித்திர நாவலை எழுத துவங்கியது நானே எதிர்பார்க்காத ஒன்று. Accidental Writer நான்.

தமிழில் படிக்க எண்ணற்ற புத்தகங்கள் இன்னும் உள்ளன. பார்க்கலாம். Let’s take one at a time. சின்ன வயது தானே. 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *