பெண்களின் “க்கும்” என்ற ஓசையின் அர்த்தத்தை புரிந்து கொள்வது திருக்குறளை புரிந்து கொள்வதை விட சிரமமாகத்தான் உள்ளது.
வெண்டைக்காயை ஒடித்து பார்த்து வாங்குவது பிஞ்சா அல்லது முத்தலா என தெரிந்து கொள்ள அல்ல. வீட்டில் திட்டு வாங்காமல் இருக்கவே.
தன் வீட்டில் powercut ஆனால் பக்கத்துக்கு வீட்டை பார்த்து விட்டு நிம்மதி அடைவதும் கணவனின் ஜென் நிலையே.
அரசாங்கத்தை மயக்கி தமிழ் திரைப்பட வரிவிலக்கு பெற ‘மாசு’.
ரசிகர்களை மயக்கி கவர்ந்திழுக்க ‘மாஸ்’.
# இவ்வளவு தான் எங்க தமில் பற்று.
பதினாறும் பெற்று பெருவாழ்வு வாழ்க ன்னு சொன்னா அந்த பதினாறுல “சிக்கன், மட்டன், காடை, கவுதாரி, மீன், நண்டு, எறா, மாடு, பன்னி, முயல், பாம்பு, பல்லி, ஒட்டகம், எலி மற்றும் மான் தான் வரும்னு நெனைக்கிறேன்.
வீட்டில் காலை டிபனாக தட்டில் ஒரு தோசைக்கு 3 சட்னி யை பார்த்தவுடன் பதறி போகிறது மனம்.
ஏன் இந்த கவனிப்பு என ?!
இது காலத்தின் மிச்சம் என மூளை உணர்த்தும் வரை.
ஜவுளிக்கடையில் நம் தோற்றத்தை விற்பனையாலனும் சேலையின் நிறத்தை மகளும், தரத்தை தாயும்,
விலையை தகப்பனும் பார்க்கிறார்கள்.
கடையில் வாங்கும் பரோட்டா, சிக்கன் குழம்புடன் தவறி வரும் ஒரு சிக்கன் பீஷின் சுவை, அடுத்த நாள் செய்யும் ஒரு கிலோ சிக்கனில் வராது. இதுவே உலக நியதி.