Ashoka the 2nd

Books

இமயவேந்தன் கரிகாலன்

சோழவேந்தன் கரிகாலன் எழுஞாயிறாய் உதயமாகி ஒளிவீசுவதை கூறுவதே இப்புதினம். சோழவேங்கை கரிகாலனின் தொடர்ச்சியாக இருந்தாலும் தனி புத்தகமாகவும் படிக்கும் வகையில் எழுதப்பட்டுள்ளது. நாவலாகவும் ஆவணமாகவும் பெரிதாக எழுதப்படாத கரிகாலனின் வடக்கேயான படையெடுப்பை துல்லியமாக விளக்கும் நாவல் இது. தென்னாட்டு மன்னன் வடக்கில் புலிக்கொடியை நாட்டியதன் பின்னணியை விவரிக்கிறது.
கரிகாலன் புகழ்பெற்ற சோழர் குலத்தை இமயத்தின் உச்சத்தில் வைத்த முதல் மாமன்னன். மிக நீண்டதோர் படையெடுப்பை நடத்திச்செல்லும்போது வேந்தனும், வீரர்களும், சோழநாடும் சந்திக்கும் சிக்கல்களும் அதிலிருந்து மீள்தலும் விறுவிறுப்பாய் எழுதப்பட்டுள்ளன. கதையின் போக்கில் சிறிதும் தொய்வின்றி கட்டியிழுத்துச்செல்லும் எழுத்துநடை, மயிர்க்கூச்செரியவைக்கும் போர்பாகங்கள்.. அழகு தமிழில் மிளிரும் சொற்கள்.. பகைவரின் சூழ்ச்சிகள்.. கரிகாலனின் அறம் சார்ந்த போர் தந்திரங்கள்.. மனதை வருடும் காதல்.. பிரியமானவர்களின் இழப்புகள் என விறுவிறுப்பும் பரபரப்புமாய் புரவியின் வேகத்தில் தாவிப்பாயும் கதைக்குள் பிறிதொரு புரவியில் பின்னோடு பயணித்து களிக்கலாம்.