Ashoka the 2nd

Books

சோழ வேங்கை கரிகாலன் பகுதி II

சோழநாடு சோறுடைத்து என்று உலகின் அட்சய பாத்திரமாய் உருமாறுவதற்கு முன்னால் சிறிய நாடாக இருந்த சோழ வரலாற்றின் இரண்டாம் பாகமிது. கரிகாலன் ஆலமாய் தலைசிலுப்பி சோழத்தின் வானமாய் வடிவெடுக்கும் முன்னர், நிலத்தடி வேராய் மறைந்திருந்து ஆயகலைகள் அனைத்தையும் கற்று பெரும் வீரனாக உருவெடுக்கிறான். சோழத்திற்கு திரும்பி வேந்தனாக முடிசூட்டிக்கொள்கிறான்.
இப்பயணத்தில் உள்ளம் வருடும் காதல், அழகான நட்புகள், சேர மன்னனின் அறம், கரிகாலன் தாய் இளவெயினி, நாங்கூர் இளவரசி ஆதிரா, சேர அரசி நல்லினியின் மதிநுட்பம் வியக்க வைக்கிறது.

வெண்ணிப்பறந்தலையில் சேர, பாண்டியர்களையும் அவர்களுக்கு துணையாக வரும் பதினோரு சிற்றரசர்களையும் நான்கு நாள் போரில் கரிகாலன் வீழ்த்துகிறான். போர்பாகங்களும், வியூகங்களும் படிப்போரை பதைபதைக்க செய்யும். திரைப்படத்தைப்போல படிப்பவர்களை போர்க்களத்திற்கே அழைத்து செல்லும் வருணனைகள் புத்தகத்திற்கு புதிது. மொழியும், கற்பனையும் இணைந்து புரியும் மாயம் தமிழிற்கு புதிது.
ஏராளமான சான்றுகள், தரவுகள், சங்கப்பாடல்களின் துணைகொண்டு விரிவாக படிப்போர் வியக்கும்படி எழுதப்பட்டுள்ளது. அத்தனை குறுநில மன்னர்களையும் வெண்ணியின் மையத்தில் ஒன்றுகூட வைக்கும் கதையின் துல்லிய நடை, வரிக்கு வரி சிலாகிக்க வைக்கும் தத்துவங்கள் அடர் வனத்தில் இலைகளினிடையே மின்னிச்செல்லும் சூரிய ஒளியாய் கதையினூடே கலந்து மொழியை செம்மையாக்கியிருக்கிறது. வாசிப்போர் கையிலும் வாள் கொடுப்பான் இந்த கரிகாலன்.