Ashoka the 2nd

ஜிம்மென்று ஒரு காதல்

ஜிம்மென்று ஒரு காதல்

திருமணம் என்ற ஒற்றைப்புள்ளியில் இணையும் இரண்டு துருவங்களான அஞ்சு என்கிற அஞ்சலிக்கும், பத்து என்கிற பத்மநாபனுக்கும் இடையே நிகழும் மோதல்கள் வெறும் சண்டைகள் அல்ல; அவை அன்பின் வேறு பரிமாணங்கள். மேட்ரிமோனியல் அல்காரிதம்களால் ஒன்று சேர்க்கப்படும் இத்தம்பதிகள் ஈகோவையும், எதிர்பார்ப்புகளையும் எப்படிக் காமெடியாகக் கையாள்கிறார்கள் என்பதே இந்த நூலிலிருக்கும் 11 சிறுகதைகளின் சாரம்.

கணவனின் அசட்டுத்தனங்களும் அவன் மனைவியிடம் வாங்கும் டோஸுகளும் கிரேசி மோகன் டைப்பிலான காமெடி சரவெடிகளாக வெளிப்பட்டுள்ளன. இல்லறம் எனும் டிராமாவில் நீங்கள் பார்க்கத் தவறிய நகைச்சுவை காட்சிகளைத் திரைக்குப் பின்னிருந்து இந்நூல் காட்டும். நம்மை விழுங்கக் காத்திருக்கும் டென்ஷன்களை விழுங்கிச் செரிக்கும் மேஜிக் நூல்.