Ashoka the 2nd

வல்வில் ஓரி

வல்வில் ஓரி

கொல்லி மலையின் வேளிர் குலத்தலைவன் ஓரி வில் வித்தையில் உலகமே வியக்குமளவு அசாத்திய வில்லாற்றல் கொண்டவர். வல்வில் என்ற பெயரே அவரது தோள் வலிமைக்குச் சான்றாக அமைந்தது. இவர் ஒரே அம்பில் யானை, புலி, மான், பன்றி, உடும்பு என ஐந்து விலங்குகளைத் துளைத்த வல்லமையை கொண்டே கம்பர் தனது ராமாயணத்தில் இராமர் 7 மராமரங்களை துளைத்ததாக எழுதினார் என்று கூறுபவர்களும் உண்டு. அவர் தன்னை நாடி வரும் கூத்தர்களுக்கும் பாணர்களுக்கும் பொன்னையும், மணியையும் மட்டுமல்லாது, தான் உயிராய் நேசித்த கொல்லி மலை நாட்டையே பரிசாக வழங்கிய மாபெரும் கொடையாளி. சேர மன்னனுக்குத் துணையாக வந்த மற்றொரு வள்ளலான மலையமான் திருமுடிக்காரிக்கும், ஓரிக்கும் இடையே நடந்த போர் சங்க காலத்தின் மிகக் கொடிய போர்களில் ஒன்று. ஒரு பெரும் நிலப்பரப்பை ஆளத் துடித்த மூவேந்தர்களின் சூழ்ச்சிகளுக்குப் பலியாகாமல், தனது மலையையும் மக்களையும் காக்க ஓரி நிகழ்த்திய அந்த இறுதிப் போர் நெஞ்சை உலுக்கக்கூடியது. வில் முறியலாம், ஆனால் வீரம் முறியாது என்பதை உலகுக்கு உணர்த்திய வல்வில் ஓரியின் அணையாத புகழைப் பேசுகிறது இந்த வரலாற்று காவியம்.