Skip to main content

Ashoka the 2nd

அதர்வா வேதம்

அதர்வா வேதம்

கொலை என்பது வெறும் குற்றம் அல்ல. அது ஒரு நுட்பமான கலை என்று நம்பும் நான்கு அறிவுஜீவி இளைஞர்கள். அமைதியின் காவலர்களாக இருக்க வேண்டிய சட்டத்தின் கைகளே அநீதி இழைக்கும்போது ஒட்டு மொத்த காவல் துறையையே பழிவாங்க துடிக்கிறார்கள் இவர்கள். நுணுக்கமாகத் திட்டமிடப்பட்ட ஒவ்வொரு கொலையும் ஒரு கலைப்படைப்பாகச் சித்தரிக்கப்பட, அந்தச் சவாலை ஏற்றுப் போர்க்களத்தில் இறங்குகிறான் ஏசிபி அதர்வா. அவன் துரத்துவது குற்றவாளிகளையா அல்லது அவர்கள் வீசியிருக்கும் புத்திசாலித்தனமான நகர்வுகளையா?

அநீதியால் உருமாறிய சாத்தான்களுக்கும், நீதியை நிலைநாட்டப் போராடும் தனி மனிதனுக்கும் இடையிலான இந்த மோதலில் ஒவ்வொரு தடயமும் ஒரு மரணப் பொறி! ஒரு திரைப்படத்தின் வேகத்தோடு, விறுவிறுப்பான திரைக்கதை பாணியில் நகரும் இந்த நாவல், சமூகத்தின் நீதியை மாபெரும் கேள்விக்குறியாக உங்கள் முன்னே நிறுத்தும்.