Ashoka the 2nd

மலையமான் திருமுடிக்காரி

மலையமான் திருமுடிக்காரி

மலையமான் திருமுடிக்காரி இரவலர்க்கு செல்வத்தையும், போர்க்களத்தில் வீரத்தையும் வாரி வழங்கியவர். இவரது வாள் வீச்சுக்கு அஞ்சி மூவேந்தர்களுமே இவருடைய நட்பைப் பெறத் துடித்தனர். சேர, சோழ, பாண்டியர்களுக்கு இடையே நடந்த போர்களில் இவர் யாருடைய பக்கம் நிற்கிறாரோ, அவர்களுக்கே வெற்றி என்ற நிலை இருந்தது. அதனாலேயே மூவேந்தர்களும் இவருக்கு திருமுடி சூட்டி அழகு பார்த்தனர். இத்தனை அதிகாரத்திற்கு மத்தியிலும், தன்னிடம் உதவி கேட்டு வரும் பாணர்களுக்கும் புலவர்களுக்கும் தேர்களையும், குதிரைகளையும், நாட்டையும் கூட ஈடாக வழங்கிய பெரும் வள்ளலாக திகழ்ந்தார். திருமுடிக்காரியின் வீரம் வாள் முனையோடு நின்று விடவில்லை. அது அநீதிக்கு எதிரான போர்க்குரலாகவும் இருந்தது. குறிப்பாக இவர் கொல்லியரசர் ஓரியின் மீது தொடுத்த போரானது வரலாற்றை மாற்றியமைத்தது. இந்நூல் மூன்று வள்ளல்களின் வாழ்வை மாற்றியமைத்த அந்த நிகழ்வுகளை கூறுகிறது. காதலும், வீரமும், ஈகையும் ஒருசேரக் கலந்த மலையமான் திருமுடிக்காரியின் இந்த வரலாறு தமிழர்களின் வீர மரபின் ஒரு உன்னத சாட்சி.