Skip to main content

Ashoka the 2nd

பறம்புத்தலைவன் பாரி

பறம்புத்தலைவன் பாரி

கடையேழு வள்ளல்களில் முதன்மையான பாரியின் கொடை, வெறும் பொருள் சார்ந்தது மட்டுமல்ல, அது உயிர் சார்ந்தது. தாவரங்களுக்கும் உயிருண்டு என்று அறிவியல் உலகம் கண்டறியும் பல நூற்றாண்டுகளுக்கு முன்பே, காற்றில் தவித்த முல்லைக் கொடிக்குத் தன் தேரை ஈந்த பேரருளாளன் பாரி. அந்த மென்மையான உள்ளத்திற்குப் பின்னால் பேரரசர்களை எதிர்த்து நிற்கும் வல்லமை பொருந்திய மாவீரன் மறைந்திருக்கிறான். முல்லைக்குத் தேர் கொடுத்த அதே கைகள், பறம்பு மலையைக் காக்க வாளேந்தியபோது வானும், மண்ணும் அதிர்ந்தன. முந்நூறு சிற்றூர்களைக் கொண்ட சிறு நிலப்பரப்பின்மீது போர் தொடுத்த சேர வேந்தன் தோற்றது எப்படி? பாரியின் வீரம் பறம்பை விட உயர்ந்ததென நிரூபித்த, அறத்திற்கும் அதிகாரத்திற்குமான வரலாற்றுப் போரே இந்நூல்.